• Sep 21 2024

யுவன் ஷங்கர் ராஜா பிறந்த போது ரஜனிக்கு அடித்த அதிஷ்டம்-இளையராஜா கூறிய சுவாரஷ்ய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு, நடிகர் அஜித்தின் தீனா திரைப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும் இதனை தொடர்ந்து துள்ளுவதோ இளமை, 7ஜி ரயின்போ காலனி, சண்டக்கோழி, புதுப்பேட்டை, பில்லா என பல வெற்றிப்படங்களில் தனது இசையால் கொடுத்து ஹிட் அடிக்க சென்றவர்.தனது இசைக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள யுவனை அவரின் ரசிகர்கள் BGM கிங் என அழைப்பார்கள்.


சமீபத்தில் யுவன் இசையில் விருமன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அத்தோடு  லத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து இவரின் இசையில் வெளியாக இருக்கிறது.

 இந்நிலையில் தற்போது இளையராஜா அவரின் ட்விட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பிறந்த போது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் ஆழியாறு அணைக்கு இளையராஜா ரஜினி நடித்த ஜானி திரைப்படத்திற்காக இசையமைக்க சென்ற போது அவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அவரிடம் வந்து சொன்னதாகவும்.

அந்த சந்தோஷத்தில் அன்று கம்போஸ் செய்த பாட்டு தான் Senorita, I Love You பாடல் எனவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார் இளையராஜா.


Advertisement

Advertisement