• Sep 20 2024

'லவ் டுடே' படத்திற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய யுவன்... அதுவும் இவ்வளவா.. வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான். இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.


அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன.

இந்நிலையில் தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகின்றது. அந்தவகையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கப்போடு போட்டது. அதாவது குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே தற்போது ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படத்திற்காக யுவன் ரூ. 1.20 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement