தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை ஏற்கனவே விற்பனை ஆனாலும் சேட்டிலைட் உரிமையை வாங்க சன் டிவி , விஜய் டிவி ஆகிய இரண்டு டிவி நிறுவனமும் முன் வரவில்லை என்று கூறப்பட்டது.
முதலில் இந்த படத்தை சன் டிவி ஒரு பெரிய தொகைக்கு வாங்கியதாகவும் ஆனால் திடீரென படத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தை ஜி டிவி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆனால் அதே நேரத்தில் சன் டிவி வாங்குவதாக இருந்த தொகையை விட மிக குறைந்த விலைக்கு தான் ஜி டிவி வாங்கி இருப்பதாகவும், தமிழில் வேறு தொலைக்காட்சிகள் இல்லை என்பதால் வேறு வழியின்றி தயாரிப்பு நிறுவனம் ஜி டிவிக்கு அவர்கள் கேட்ட தொகைக்கு சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி டிவி வாங்கிய நிலையில் அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விஜய்யின் படத்தை வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் திட்டமிட்டபடி இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Listen News!