எச்.வினோத் இயக்கத்திலும், அஜித் நடிப்பிலும் உருவான 'துணிவு' திரைப்படமானது கடந்த 11-ஆம் தேதி வெளியாகி இன்றுவரை ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏ.கே 62' என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.
லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த மற்றோரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால், ஏகே62 படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. அத்தனை மொழிகளிலும் உருவாகும் ஏகே62 படத்தை திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூவர்மாக கூறியிருப்பதாவது. அதாவது "சில்லா சில்லா தான் எங்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால், ஏகே62 தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு வெளியாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
We tried to stay CHILLA CHILLA but we just CANNOT! 🤩🤩#AK62 is coming on Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada as a post theatrical release! 🔥#NetflixPandigai #AK62 #NetflixLaEnnaSpecial pic.twitter.com/LWrBYY1eBY
இதன் காரணமாக தற்போது #Ak62 என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!